ரஜினி வந்தால் வரவேற்போம்

தமிழகத்தில் மோடியின் கரத்தை வலுப்படுத்த ரஜினி வந்தால் வரவேற்போம் என்று தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Updated on
1 min read

தமிழகத்தில் மோடியின் கரத்தை வலுப்படுத்த ரஜினி வந்தால் வரவேற்போம் என்று தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற பின்தங்கிய வகுப்பினர் ஆணையத்துக்கு அரசியல் சாசனம் அந்தஸ்து பற்றிய கருத்தரங்கில் பங்கேற்க ஈரோடு வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்துக்கு அரசியல் சாசனம் அந்தஸ்து வழங்கியதன்மூலம், பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான பாதுகாப்பு பாஜக அரசுதான் என பிரதமர் மோடி நிரூபித்துள்ளார். மக்களுக்காக பல நல்ல திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்துவதை பொறுக்கமுடியாத திமுக, மத்திய அரசு, மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக பொய்யான தகவல்களை பரப்பிவருகிறது.
நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் அரசியலுக்கு வர உரிமை உள்ளது. அதன்படி ரஜினி அரசியலுக்கு வருவதற்கும், தனிக்கட்சி தொடங்குவதற்கும் அவருக்கு உரிமையுள்ளது.
தமிழகத்தில் மோடியின் கரத்தை வலுப்படுத்த ரஜினி வருகிறார் என்றால் பாஜக வரவேற்க தயாராக உள்ளது என்றார்.
இக்கருத்தரங்குக்கு, பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கலைச்செல்வன் வரவேற்றார். கோட்ட பொறுப்பாளர் வைரவேல், இணைப் பொறுப்பாளர் பாயிண்ட் மணி, மாநிலச் செயலாளர் சரஸ்வதி, வடக்கு மாவட்டத் தலைவர் சித்திவிநாயகம், மாநில பிரசார அணி பொறுப்பாளர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் கார்வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com