ஈரோடு காவிரி ஆற்றில் தாய்க்கு ஆரத்தி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
காவிரி நதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது தீர்த்த விழா. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது மகாபுஷ்கரம் விழாவாகும். குரு, எந்த ராசியில் உள்ளார் என்பதை பொருத்து சஞ்சரிக்கும் கால அளவு வரை புஷ்கரம் நடைபெறும்.
புஷ்கர காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகியோரும் ஒருசேர இருந்து அருள்பாலிக்கின்றனர். குருபகவான் மேஷ ராசி முதல் மீன ராசியை கடக்கும்போது கங்கா, நர்மதா, சரஸ்வதி, யமுனா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்ரா, பிரம்மபுத்ரா, ப்ராணஹிதா என 12 நதிகளிலும் அந்தந்த ராசிகளில் புஷ்கர விழா, புனித நீராடல் நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டு, காவிரி புஷ்கரம் செப்டம்பர் 12 முதல் 24- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புஷ்கர விழாவை முன்னிட்டு காவிரிக்கரை, சுந்தராம்பிகை உடனமர் ஸ்ரீ சோழிஸ்வரர் கோயில் சார்பில் காவிரித் தாய்க்கு ஆரத்தி தொடக்கவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையொட்டி, காவிரி ஆற்றில் பூக்கள் தூவி, தீபாராதனை காட்டி சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.