Enable Javscript for better performance
கரும்பு வளர்ப்போர் சங்க பொதுக் குழு- Dinamani

சுடச்சுட

    

    கரும்பு வளர்ப்போர், சக்தி  சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் சங்கப்  பொதுக் குழுக்  கூட்டம் கவுந்தப்பாடி சர்க்கரை மார்க்கெட் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     இக்கூட்டத்துக்கு, தலைவர் ஏ.எம்.ராஜா தலைமை வகித்தார். செயல் தலைவர், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி முன்னிலை வகித்தார். செயலாளர் பா.அ.சென்னியப்பன் வரவேற்றார். பொருளாளர் எம்.ஆர்.சிவசங்கர் வரவு, செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.
     கூட்டத்தில், சக்தி சர்க்கரை ஆலை 2014-15, 2015-16 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் அரவை செய்த கரும்புக்கு டன் ஒன்றுக்கு பாக்கி உள்ள ரூ. 85 தொகையை உடனடியாக  வழங்க வேண்டும். பொதுப் பேரவைக் கூட்டத்தின்போது ஆலை நிர்வாகத்தால் அறிமுகப்படுத்திய உயர் விளைச்சல் ரகமான வி.சி.எப் 0517 ரக கரும்பு விதைக் கரனைகளை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக கரும்பு வெட்டி முடித்து 15 நாள்களுக்குள் பணம் தராமல் காலம் கடந்து கொடுத்த நாள்களுக்கு ஆலை நிர்வாகம் ஒத்துக் கொண்டபடி 15 சதவீத வட்டியை உடனடியாகத் தர வேண்டும்.
     2014-15, 2015-16, 2016-17 ஆண்டுகளுக்கு தமிழக அரசு அறிவித்த விலையை கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai