Enable Javscript for better performance
தக்காளி விலை திடீர் உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
     கடும் வறட்சி காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்படைந்ததால் ஆகஸ்ட் மாத இறுதியில் தக்காளி விலை ரூ. 60 ஆக உயர்ந்தது. 2 வாரங்கள் வரை இந்த விலை உயர்வு நீடித்த நிலையில் படிப்படியாக விலை குறைந்து செப்டம்பர் மத்தியில் ஒரு கிலோ தக்காளி ரூ. 13-ஆக விலை குறைந்தது.
     ஓரிரு வாரங்கள் வரை நீடித்த தக்காளி விலை கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியது. ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 44-க்கு சனிக்கிழமை விற்பனையானது. அதேசமயம் வெளிச் சந்தையில் ரூ. 42 முதல் ரூ. 46 வரை தரத்துக்கேற்ற விலையில் விற்பனையானது.
     திடீர் விலை உயர்வுக்கான காரணம் குறித்து விவசாயிகள் கூறியதாவது:
     ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, சத்தியமங்கலம், அந்தியூர், டி.என்.பாளையம், மொடக்குறிச்சி, சிவகிரி, கொடுமுடி, சென்னிமலை, காஞ்சிகோவில், நசியனூர் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் தக்காளிச் செடிகள் அழுகி, காய்ப்பு குறைந்துவிட்டது.
    இதன் காரணமாக விளைச்சல் வீழ்ச்சியடைந்ததுடன், பழுத்த பழங்களும் வெடித்துவிட்டன. இதன் காரணமாக  சந்தைக்கு போதுமான தக்காளி வரத்து இல்லாத காரணத்தால் விலை உயர்ந்துவிட்டது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 44-க்கு உழவர் சந்தையிலும், வெளிச் சந்தையில் ரூ. 46 வரையிலும் விற்பனையாகிறது என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai