Enable Javscript for better performance
மாநில இளையோர் தடகளப் போட்டி: கொங்கு பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில இளையோர் தடகளப் போட்டியில் கொங்கு பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

     மாநில அளவிலான 31-ஆவது இளையோர் தடகளப் போட்டிகள் ராமநாதபுரம் மாவட்டம், சேதுபதி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஈ. செளம்யா 14 வயதுக்கு உள்பட்டோர் பிரிவு, 100மீ ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், மாணவி பி. தாரணி 600 மீ ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். 16 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் எல்.சரினி ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.  
     வெற்றி பெற்ற மாணவிகள், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் டி.சரவணன் ஆகியோரை பள்ளித் தலைவர் ஜி.யசோதரன், துணைத் தலைவர் எஸ்.குமாரசாமி, தாளாளர் டி.என்.சென்னியப்பன், பொருளாளர் பி.ஆர்.சுப்பிரமணியன், இணைச் செயலாளர் கே.பி.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai