அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழா: சிறப்புப் பேருந்துகள் நாளைமுதல் இயக்கம்

அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழாவுக்காக, ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 
Published on
Updated on
1 min read

அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழாவுக்காக, ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட செய்தி:
அந்தியூரை அடுத்த புதுப்பாளையம் குருநாதசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேர்த் திருவிழா நடைபெறும் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளான கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், கவுந்தப்பாடி, பவானி ஆகிய பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். 
இதற்காக, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், அந்தியூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கவுந்தப்பாடி, பவானி, குருவரெட்டியூர், சத்தி, நம்பியூர், பர்கூர், வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம், மேட்டூர், அம்மாபேட்டை ஆகிய ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 
கூடுதல் பயணிகளின் வருகையைப் பொருத்து, தேவையான அளவுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் செல்லும் ஊர்களுக்கு வழிகாட்டவும், பயணிகளை ஏற்றி, இறக்கவும், பயணிகளுக்கு உதவி செய்யவும், முக்கிய பேருந்து நிறுத்தங்களிலும், குருநாதசாமி கோயில் அருகிலுள்ள அலுவலகம், பந்தல் உள்ளிட்ட இடங்களிலும்  நூற்றுக்கணக்கான சிறப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.