ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் திராவிட இயக்க ஆய்வு மையம், காவ்யா அறக்கட்டளை ஆகியவை சார்பில் "திராவிடப் பெண்ணியம்' என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்த் துறைத் தலைவரும், கருத்தரங்க இயக்குநருமான கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற கவிஞர் திலகபாமா பங்கேற்று, தமிழ்க் கதைகளில் திராவிடப் பெண்ணியம் என்ற தலைப்பிலும், பெரியாரின் திராவிடப் பெண்ணியம் என்றதலைப்பில் சுந்தரவல்லியும், திரைப்படங்களில் திராவிடப் பெண்ணியம் என்ற தலைப்பில் பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரமும் பேசினர்.
இந்தக் கருத்தரங்கில் பேராசிரியர்கள் அங்கயற்கண்ணி, சிவமணி, ஜோதிமணி, ராக்கு, மணிகண்டன், விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.