வேன் கதவு திறந்ததால் சாலை விபத்து: ஒடிஸா இளைஞர்கள் சாவு

பெருந்துறை அருகே, இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒடிஸா மாநில இளைஞர்கள் மீது வேனின் கதவு திறந்து மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.
Published on
Updated on
1 min read

பெருந்துறை அருகே, இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒடிஸா மாநில இளைஞர்கள் மீது வேனின் கதவு திறந்து மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.
ஒடிஸா மாநிலம்,  திகார்பூரைச் சேர்ந்த அமர்மாலிக் மகன் டேனியல் மாலிக் (25). இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தில் தங்கி, அங்குள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தையல்காரராக வேலை பார்த்து வந்தார். 
ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில், டேனியல் மாலிக், தன்னுடன் வேலை பார்த்து வரும், ஒடிஸா மாநிலம், பானிமோராவைச் சேர்ந்த மானு சாந்த் மகன் பிபேக் சாந்த் (31) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பெருந்துறைக்குச் சென்றார். 
இவர்கள், பணிக்கம்பாளையம், பள்ளக்காட்டுத்தோட்டம் அருகே வந்தபோது, எதிரே பெருந்துறையில் இருந்து பணிக்கம்பாளையம் நோக்கி வந்த வேன் இவர்களைக் கடந்தது. அப்போது, திடீரென வேனின் பின் பகுதியில் உள்ள கதவு திறந்து இவர்கள் மீது மோதியது. 
இதில், சம்பவ இடத்திலேயே டேனியல் மாலிக் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பிபேக்சாந்த் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். 
இதுகுறித்து, பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.