"மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் வரை வரி உயர்வை அமல்படுத்தக் கூடாது'

சொத்து வரி, வரி சீரமைப்பு நடவடிக்கைகளை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வந்து அமல்படுத்த

சொத்து வரி, வரி சீரமைப்பு நடவடிக்கைகளை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வந்து அமல்படுத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் தலைவர் டி.ஜெகதீசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சொத்து வரி, வரி சீரமைப்புகளை, மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வந்த பிறகே எடுக்க வேண்டும். அதிகாரிகள் குழுவால் எடுக்கும் முடிவை அமல்படுத்தக் கூடாது.நீண்ட இடைவெளிக்குப்பின் வரி நிர்ணயிக்கப்படுகிறது என்பதற்காக, குடியிருப்புக்கு 50 சதவீதமும், வணிக கட்டடங்களுக்கு 100 சதவீதமும் வரியை உயர்த்துவது ஏற்புடையதல்ல. உயர்மட்டக் குழு ஏற்படுத்தி, விவாதித்து வரியை உயர்த்த வேண்டும்.
மாநகராட்சி சாலைகள் குண்டும் குழியுமாகவும், பெரும்பாலான இடங்களில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. அவற்றை சரிசெய்ய வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தில் பொருள்களின் விலை குறைவாக உள்ளதாக கருதுவதால், சிறு, குறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 
தேசிய அளவில் 15 கோடி ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்குச் செல்ல வேண்டிய வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது. ஆனால், ஆன்லைன் செய்யும் நிறுவனங்கள் ரூ. 5 ஆயிரம்  கோடிக்கு மேல் நஷ்ட கணக்கு காட்டுகிறது. எனவே, சிறு, குறு வணிக நிறுவனங்களைக் காக்க ஆன்லைன் வர்த்தக முறையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.
இதில், பொதுச் செயலாளர் சி.பாலகிருஷ்ணன், பொருளாளர் துரைசாமி, ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com