Enable Javscript for better performance
ஈரோட்டில் 294 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மாவட்ட சமூக நலத் துறை சார்பில் 294 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
     ஈரோடு, சம்பத் நகர் கொங்கு கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு கோட்டாட்சியர்  நர்மதாதேவி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு 294 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை வழங்கி வாழ்த்திப் பேசினர்.
     இதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட 116 பெண்கள், ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட 67 பெண்கள், சென்னிமலை பகுதிக்கு உள்பட்ட 24 பெண்கள் என மொத்தம் 294 பேருக்கு தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது. மேலும், 207 பட்டதாரி பெண்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், 87 பெண்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் திருமண உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
     இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் அம்பிகா, முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, அதிமுக பகுதி செயலாளர்கள் ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பி.பி.கே.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai