Enable Javscript for better performance
கிரிக்கெட்: இறுதிச் சுற்றில் கோபி, கொங்கு கல்லூரி அணிகள்- Dinamani

சுடச்சுட

    

    கிரிக்கெட்: இறுதிச் சுற்றில் கோபி, கொங்கு கல்லூரி அணிகள்

    By DIN  |   Published on : 09th February 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில், கோபி கலை, அறிவியல் கல்லூரி அணியும், கொங்கு கலை, அறிவியல் கல்லூரி அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. 
     பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் சங்கர ராமநாதன், செயலாளர் ஜாபர்ஆசிக் அலி, பொருளாளர் அருண் ஆறுமுகம் ஆகியோர் தொடக்கிவைத்தனர். 
     இப்போட்டியில், மாவட்ட அளவில் தேர்வு பெற்ற நந்தா கலை, அறிவியல் கல்லூரி, ஸ்ரீஅம்மன் கலை, அறிவியல் கல்லூரி, அல் - அமீன் பொறியியல் கல்லூரி, கோபி வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, கோபி கலைக் கல்லூரி உள்ளிட்ட 12 அணிகள் கலந்துகொண்டு விளையாடின.  போட்டிகள் 30 ஓவர் அடிப்படையில் நடைபெற்றது. 
     வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கோபி கலைக் கல்லூரி, நந்தா கலை, அறிவியல் கல்லூரி அணியையும், கொங்கு பொறியியல் கல்லூரி அணி, பாலிடெக்னிக் அணியையும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை காலை 40 ஓவர் அடிப்படையில் நடைபெறவுள்ளது. 
     மாலை 4 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. மாவட்ட கிரிக்கெட் நிர்வாகிகள் கலந்துகொண்டு பரிசுகளை வழங்குகின்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட கிரிக்கெட் சங்க ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai