Enable Javscript for better performance
குடிசை மாற்று வாரிய வீடுகள் பெற முன்னாள் படைவீரர்கள்  விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    குடிசை மாற்று வாரிய வீடுகள் பெற முன்னாள் படைவீரர்கள்  விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் படைவீரர்கள், விதவையர்களுக்கான தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும்  வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட தகவல்:
     தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் சித்தோடு அருகே உள்ள நல்லாகவுண்டன்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், விதவைகளுக்கு 150 வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன.
     முன்னாள் படை வீரர்களுக்கோ அல்லது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ வேறு எங்கும் வீட்டு மனையோ, வீடோ இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு  மிகாமல்  இருக்க வேண்டும். குடியிருப்பு கட்டுவதற்கான தொகையில் முன் பணமாக 10 சதவீதம் தொகையை செலுத்தி ஒப்புதல் படிவத்தை  ஒப்படைக்க  வேண்டும்.  தகுதியான முன்னாள் படைவீரர்கள், விதவைகள் உரிய படிவத்தை ஈரோடு , காந்திஜி சாலை, ஜவான்ஸ் பவன், மூன்றாவது தளத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் முன்னாள் படை வீரர்களுக்கான படை விலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai