Enable Javscript for better performance
கோரக்காட்டூர் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயில் ஊராட்சிக்கு உள்பட்ட கோரக்காட்டூர் அருட்கரிய காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
     இக்கோயில் குண்டம் தேர்த் திருவிழா ஜனவரி 24-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.   தொடர்ந்து, 5-ஆம் தேதி கிராமசாந்தியும், 6-ஆம் தேதி கொடியேற்றம் , சந்தனக் காப்பு, சுமங்கலி பூஜையும், 7-ஆம் தேதி பொங்கல் 
    வைத்தல், குண்டத்துக்கு கரும்பு கொண்டு வருதல், குண்டம் திறப்பு, குண்டத்துக்கு தீ முட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
     பிப்ரவரி 8-ஆம் தேதி அதிகாலை அம்மை அழைத்தலைத் தொடர்ந்து திருக்கொடி ஏற்றப்பட்டு தீ குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். முதலாவதாக தலைமைப் பூசாரி மனோகரன் குண்டம் இறங்கினார். பின்னர், பூசாரிகளும், பொதுமக்களும் குண்டம் இறங்கினர்.
     வெள்ளாங்கோயில், கோரக்காட்டூர், பழையூர், அய்யம்புதூர், கடுக்காம்பாளையம், கொளத்துப்பாளையம், குஞ்சரமடை, அண்ணாநகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தீக்குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
     பிப்ரவரி 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தேர் உற்சவமும், 10-ஆம் தேதி முத்துப்பல்லக்கு வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. 11-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா முடிவடைகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai