Enable Javscript for better performance
சத்தியில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை- Dinamani

சுடச்சுட

    

    சத்தியமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
     சத்தியமங்கலம் கொங்கு குலாலர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் விசாக நட்சத்திரத்தில் திருநீலகண்டர் குருபூஜை கொண்டாடப்படும். அதன்படி, ஸ்ரீ பவானீஸ்வரர் ஆலயத்தில் குரு பூஜை விழா வியாழக்கிழமை துவங்கியது. 63 நாயன்மார்களில்  ஒருவரான திருநீலகண்ட சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், வழிபாடுகளும் அதைத் தொடர்ந்து உற்வசமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
     விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் உற்சவமூர்த்தி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து,  திருநீலகண்டர் கோயிலில் நடைபெற்ற அன்னதானவிழாவில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai