Enable Javscript for better performance
சர்வதேச யோகா போட்டி: பாரதி வித்யாலயா பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச யோகா போட்டி: பாரதி வித்யாலயா பள்ளி சிறப்பிடம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச அளவிலான யோக போட்டியில், கோபி பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.  
     இந்தியன் இளைஞர் ஒலிம்பிஷியன் பெடரேஷன் சார்பில், தெற்கு ஆசிய இன்டர்நேஷனல் யோகா போட்டிகள் அந்தமானில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
     ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில், 8 வயதுக்கு மேல் 10 வயதுக்குள் உள்ள பிரிவில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர் ஜி.டி.கே.ஹரிபிரனவ் முதல் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
     10 வயதுக்குமேல் 12 வயதுக்கு உள்பட்ட பிரிவில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி கே.எஸ்.பிரியமாலா முதல் இடத்தைப் பிடித்தார். 16 வயதுக்குமேல் 18 வயதுக்கு உள்பட்ட பிரிவில் பிளஸ் 1 பயிலும் மாணவர் பி.நிதீஷ் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
     போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பள்ளித் தாளாளர் பி.ஆர்.வேலுமணி பரிசு வழங்கிப் பாராட்டினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai