Enable Javscript for better performance
பிப்ரவரி 16-இல் மாற்று திறனாளிகளுக்கான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு  முகாம் பிப்ரவரி 16-ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
     இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
     ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் கோட்டாட்சியர் தலைமையில், பிப்ரவரி 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்திலும், பிப்ரவரி 21-ஆம் தேதி (புதன்கிழமை) கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் காலை 10 முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
     இம்முகாமில் மாற்றுத் திறனாளிகள் தங்களது குறைகள், தேவைகள் குறித்து மனு அளித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai