Enable Javscript for better performance
மாநில வில்வித்தைப் போட்டி: சாரதா இண்டர்நேஷனல் பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில வில்வித்தைப் போட்டி: சாரதா இண்டர்நேஷனல் பள்ளி சிறப்பிடம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான வில் வித்தைப் போட்டியில் சாரதா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
     மாநில அளவிலான ரூரல் கேம்ஸ் பெடரேஷன் கப் சார்பில் நான்காம் ஆண்டு வில் வித்தைப் போட்டி சேலம் ராயல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
     இப்போட்டியில் பங்கேற்ற சாரதா இண்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் இரு தங்கப் பதக்கம், 10 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். மாணவர்கள் திருவிக்ரம், அஸ்வின் பிரசாத் ஆகியோர் தலா ஒரு தங்கப் பதக்கமும், சரவணப் பிரியா, ஸ்ரீ சபரி, சச்சின் சேகர், ஜனசுவேதா, வருண், யுவன், கர்சவர்தன், நவ்யா, கிஷோர், அசய்நவநீத் ஆகியோர் தலா ஒரு வெள்ளிப் பதக்கமும், தன்வேஷா சிபிகா, நிஷாந்தினி, நவீன், சுகாஷ் ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
     வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளிச் செயலர் சீதாலட்சுமி, ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai