Enable Javscript for better performance
மாவட்ட கிரிக்கெட் போட்டி: கொங்கு கல்லூரி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    ரோட்ராக்ட்  சங்கம் சார்பில் நடத்தப்பட்ட  மாவட்ட  அளவிலான கிரிக்கெட் போட்டியில், ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
     கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் ரோட்ராக்ட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி அண்மையில் நடைபெற்றது.
     இப்போட்டியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 8 கல்லூரி அணிகள் பங்கேற்றனர். போட்டிகளை கொங்கு கலை, அறிவியல் கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் ச.ராமன் தொடக்கி வைத்தனர். 
     இறுதிப் போட்டியில் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியும், கோபி கலை, அறிவியல் கல்லூரியும் விளையாடியதில்  அதிக ரன்கள் எடுத்த கொங்கு கலை, அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையையும், ரொக்கப் பரிசு ரூ. 5 ஆயிரத்தையும் பெற்றனர். இதில், மூன்றாம் பரிசை ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியும், நான்காம் பரிசை ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி அணியினரும் பெற்றனர்.
     பரிசளிப்பு நிகழ்ச்சியில், கொங்கு பொறியியல் கல்லூரித் தாளாளர் வெங்கடாசலம், உடற்கல்வித் துறை இயக்குநர் ச.செந்தில் குமார், ரோட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர், உதவிப் பேராசிரியர் அருளானந்த் ஆகியோர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினர். இக்கல்லூரி மாணவர் நவீனுக்கு பந்து வீச்சாளருக்கான விருது வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai