Enable Javscript for better performance
மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 16-இல் நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கி மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     ஊதிய உயர்வில் அதிகாரிகள், ஊழியர்கள் என்று பாகுபாட்டை புகுத்தக் கூடாது. ஊதிய உயர்வில் 2.57 கணக்கீட்டுக் காரணியை உத்திரவாதப்படுத்த வேண்டும். 26 மாத கால ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை முழுமையாக அளிக்க  வேண்டும். பணிக் காலத்தில் மூன்று பதவி உயர்வுகளை உத்திரவாதப்படுத்த வேண்டும். பகுதி நேரப் பணியாளர்களை முழு நேரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை ஐ.டி.ஐ., ஒப்பந்தத் தொழிலார்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     ஈரோடு தலைமைப் பொறியாளர் அலுவலகம் அருகே  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டலச் செயலாளர் சி.ஜோதிமணி தலைமை வகித்தார். இதில், பி.எம்.எஸ். மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், சி.ஒ.டி.இ.இ. மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.இளங்கோ உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai