Enable Javscript for better performance
வேன் கவிழ்ந்து விபத்து: 12 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    கோபி அருகே வியாழக்கிழமை காலை குரு மிளகு பறிக்கச் சென்றவர்கள் பயணம் செய்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்தனர்.
     சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கருப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மைசூரில் குருமிளகு பறிப்பதற்காக வேனில் சென்றனர். சுமார் 20 பேர் சுற்றுலா வேன் பிடித்து சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை சக்திவேல் (28) என்பவர் ஓட்டிச் சென்றார்.
     இந்த வேன் வியாழக்கிழமை அதிகாலை கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
     இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் சக்திவேல், வேனில் இருந்த தொழிலாளர்கள் கணேசன் (28), சித்ரா (25), பார்வதி (37), ராமாயி (40), கனகாள் (26), சடையன் (30), பாப்பாயி (40), நதியா (28) உள்பட 12 பேர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai