Enable Javscript for better performance
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோபியில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 2017-ஆம் ஆண்டு வருடாந்திர ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு வழங்கிய பணத்தை முழுமையாக முறையாகத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்புக்கான பணத்தை தொழில் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 12 (3) ஒப்பந்தப்படி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் முறையாக வழங்க வேண்டும். 
     தமிழக மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்தில் தொழிலாளர்களின் சம்பளம், வாகனப் பராமரிப்பு என பல்வேறு வகையில் முறைகேடு செய்யும் நிறுவனத்தின் மீது நீதி விசாரணை அமைக்க வேண்டும். நிர்வாகத்தின் பாரபட்சமான தொழிலாளர் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai