சுடச்சுட

  

  சென்னிமலை ஒன்றிய குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. 
   கூட்டத்துக்கு, மன்ற உறுப்பினர் பி.பி.ராமசாமி தலைமை வகித்தார். மன்றத் தலைவர் செ.கந்தசாமி, செயலாளர் பொன்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் எம்.எஸ்.பழனிசாமி வரவேற்றார். பொருளாளர் என்.டி.ராஜேந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார். 
   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சென்னிமலை பகுதியில் ஒரு நெம்பர் லாட்டரியை முற்றிலுமாக ஒழிக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பொருள்களாகிய வாழைக்காய், மாங்காய்களை பழுக்க வைக்க ரசாயன கலவைகளைப் பயன்படுத்துபவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னிமலை பகுதியில் உள்ள பல டீ கடைகளில் கலப்பட டீ தூள்களைப் பயன்படுத்துகின்றனர். இதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   சென்னிமலையில் உள்ள சில கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், விசைத்தறியில் ரகங்களை உற்பத்தி செய்து அதை கைத்தறி ரகம் எனக் கூறி, அரசு மானியம் பெறுவதை தடுக்க வேண்டும். சரியாக செயல்படாமல் இருக்கும் சென்னிமலை கால்நடை மருத்துவமனையில் வேறு புதிதாக ஒரு மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும். குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai