சுடச்சுட

  

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பிரசாரப் பயணக் கூட்டம், விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றன.
   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநிலத்தின் 6 முனைகளிலிருந்து ஜூன் 8 ஆம் தேதி முதல் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதி நீலகிரியிலிருந்து திருச்சி வரை பிரசாரப் பயணம் நடத்தி வருகின்றனர். இந்த பிரசாரப் பயண விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில், பிரசாரத்தில் விலைவாசி உயர்வுக்குக் காரணமான பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் வழங்க வேண்டும். வீட்டுமனைப் பட்டா கேட்ட அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து சிறு தொழில்களைப் பாதுகாக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும், சாதி ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்திட வேண்டும். கல்வி மருத்துவத்தை வியாபாரம் ஆக்காமல் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தும், கலை நிகழ்ச்சி பிரசாரப் பயணமும் மேற்கொண்டனர்.
   கோபி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரசாரத்துக்கு, தாலுகா செயலாளர் கெம்புராஜ் தலைமை வகித்தார். மாணிக்கம் உள்பட கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai