அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 6.85 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 6.85 லட்சத்துக்கு வேளாண் பொருள்கள் ஏல விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. 

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 6.85 லட்சத்துக்கு வேளாண் பொருள்கள் ஏல விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. 
இங்கு விற்பனைக்கு வந்த 24,274 தேங்காய்களில் சிறியவை ரூ. 6 முதல் பெரியவை ரூ. 18 வரையில் மொத்தம் ரூ. 2,90,385-க்கு விற்பனையானது.  53 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 60.67 முதல் ரூ. 117.79 வரையில் மொத்தம் ரூ. 1,44,264-க்கும், 77 மூட்டைகள் துவரை கிலோ ரூ. 29.09 முதல் ரூ. 37.19 வரையில் மொத்தம் ரூ. 1,64,618-க்கும் ஏலம் போயின. 
4 மூட்டைகள் நரிப் பயிர் கிலோ ரூ. 48.19 முதல் ரூ. 48.29 வரையில் மொத்தம் ரூ. 4,856-க்கும், 21 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 11.79 முதல் ரூ. 19.96 வரையில் மொத்தம் ரூ. 23,574-க்கும், 3 மூட்டைகள் அவரை கிலோ ரூ. 34.19 முதல் ரூ. 38.14 வரையில் மொத்தம் ரூ. 5,273-க்கும் விற்பனையானது. 
14 மூட்டைகள் எள் கிலோ ரூ. 76.19 முதல் ரூ. 86.19 வரையில் மொத்தம் ரூ. 28,917-க்கும், 7 மூட்டைகள் உளுந்து கிலோ ரூ. 36.29 முதல் ரூ. 38.89 வரையில் மொத்தம் ரூ. 11,232-க்கும், தட்டைப் பயிறு 3 மூட்டைகள் கிலோ ரூ. 32.19 முதல் ரூ. 36.26 வரையில் மொத்தம் ரூ. 1,850-க்கும், 5 மூட்டைகள் கொள்ளு கிலோ ரூ. 33.29 முதல் ரூ. 34.10 வரையில் மொத்தம் ரூ. 8,741-க்கும், ஒரு மூட்டை ஆமணக்கு கிலோ ரூ. 37.19 முதல் ரூ. 37.19 வரையில் மொத்தம் ரூ. 1,562-க்கும் விலை போயின. மொத்த வர்த்தகம் ரூ. 6,85,272.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com