பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சிகள் மூலம் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சிகள் மூலம் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 
மாவட்ட சமூக நலத் துறை, கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இப்பிரசாரத்துக்கு,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்புசாமி தலைமை வகித்தார்.
 ஈரோடு கோட்டாட்சியர் நர்மதா தேவி பிரசாரத்தைத் தொடக்கி வைத்தார். சமூக நலத் துறை அலுவலர் அம்பிகா, நிர்வாகி மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
ஈரோடு பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பவானி, கோபி, சத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அதைத் தடுக்கும் முறைகள் குறித்து  பாடல்கள், கிராமிய நடனங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
கிராமங்களில் வசிக்கும் பெண்கள் தங்கள் மீதான வன்முறைகளை 1091 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியில் அழைத்துத் தகவல் தெரிவிக்கலாம். 
பெண்கள் மீதான கொடுமைகளைத் தடுக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com