Enable Javscript for better performance
ஈரோடு: கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டத் தேர்தல்: முதல்கட்ட தேர்தலுக்கு மார்ச் 26-இல் வேட்பு மனு- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு: கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டத் தேர்தல்: முதல்கட்ட தேர்தலுக்கு மார்ச் 26-இல் வேட்பு மனு தாக்கல்

    By DIN  |   Published on : 24th March 2018 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1060 கூட்டுறவுச் சங்கங்களுக்கு முறையே ஏப்ரல் 2, 7, 16, 23 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.
    முதல் கட்டத்தேர்தல்: முதல் கட்டமாக 268 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் திங்கள்கிழமை (மார்ச் 26) தொடங்குகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் 27-ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். 28-ஆம் தேதி மனுக்களை வாபஸ் பெறலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அதே நாளில் வெளியிடப்பட உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 2-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 3-ஆம் தேதியும் நடக்கிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் 7-ஆம் தேதி நடைபெறும் தேர்தல் மூலம் தலைவர், துணைத் தலைவர்களைத் தேர்வு செய்வார்கள்.
    2-ஆம் கட்டத் தேர்தல்: இரண்டாம் கட்டமாக 262 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 2-ஆம் தேதியும், வேட்பு மனுக்களை வாபஸ் பெறும் நிகழ்வு 3-ஆம் தேதியும், ஏப்ரல் 7-ஆம் தேதி வாக்குப் பதிவும் நடைபெறுகிறது. ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் 13-ஆம் தேதி நடைபெறும் தேர்தல் மூலம் தலைவர், துணைத் தலைவர்களை தேர்வு செய்வார்கள்.
    3-ஆம் கட்டத் தேர்தல்: மூன்றாம் கட்டமாக 266 சங்கங்களுக்கு நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 10 -ஆம் தேதியும், 11 -இல் வேட்பு மனு வாபஸ் பெறும் நிகழ்வும் நடைபெறுகிறது. ஏப்ரல்.16 -இல் வாக்குப்பதிவும், ஏப்ரல் 17 -இல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் தேர்வுசெய்யப்படும் உறுப்பினர்களால் ஏப்ரல்.28-இல் நடைபெறும் தேர்தல் மூலம் தலைவர்கள், துணைத்தலைவர்களை தேர்வு செய்வார்கள்.
    4 -ஆம் கட்டத் தேர்தல்: நான்காம் கட்டமாக 264 சங்கங்களுக்கு நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல்-16-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. 18-இல் வேட்பு மனு வாபஸ் பெறலாம். ஏப்ரல் 23-இல் வாக்குப்பதிவும், ஏப்ரல்-24 இல் வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்டு ஏப்ரல் 28 -இல் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூட்டுறவுத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai