Enable Javscript for better performance
ஈரோட்டில் முதியோர் இல்லவாசிகளுக்கு கல்லூரி மாணவர்கள் நடத்திய விழா- Dinamani

சுடச்சுட

    

    ஈரோட்டில் முதியோர் இல்லவாசிகளுக்கு கல்லூரி மாணவர்கள் நடத்திய விழா

    By DIN  |   Published on : 24th March 2018 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சார்பில் ஆதரவற்றோர் இல்லவாசிகளுக்கு கல்லூரி வளாகத்தில் அண்மையில் விழா எடுத்து முதியோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
    ஈரோடு திண்டலில் உள்ள லிட்டில் சிஸ்டர்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட ஆண்கள், பெண்கள் என 20 -க்கும் மேற்பட்ட முதியோர்களை கல்லூரி நிர்வாகிகளும், மாணவர்களும் வரவேற்றனர்.
    இதையடுத்து நடைபெற்ற நிகழ்வுக்குத் தலைமை வகித்து கல்லூரி முதல்வர் இரா. வெங்கடாசலம் பேசுகையில், 'முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு அந்த இல்லத்தைத் தாண்டி பொழுதைக் கழிக்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இந்நிலையில், அந்தக் குறையைப் போக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளும் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களின் யதார்த்த நிலைமையைப் புரிந்து கொள்ள வாய்ப்பாக இந்த நிகழ்வு அமையும் என்றார். முதியோர் இல்ல நிர்வாகி லூசி வாழ்த்தினார்.
    இதையடுத்து நடைபெற்ற குழு நடனம், நாடகம், தனிப் பாடல்கள், விடுகதைகள் உள்ளிட்ட பிரிவுகளில் முதியோர்கள் பங்கேற்றனர்.
    இதையடுத்து முதியோர்கள் தங்கள் கருத்துகளைப் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மாணவர்களுடனான இந்த சந்திப்பு தங்களுக்கு புதிய அனுபவமாகவும், மன மகிழ்ச்சியையும் தந்ததாகவும் முதியோர்கள் குறிப்பிட்டனர்.
    இதையடுத்துப் பேசிய மாணவ, மாணவிகள், தங்கள் பெற்றோர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நிகழ்வு அழுத்தமாக மனதில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டனர். இதையடுத்து போட்டிகளில் வென்ற முதியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai