Enable Javscript for better performance
உலக தண்ணீர் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    கோபி அருகேயுள்ள குள்ளம்பாளையம் பாசனசபை அலுவலகத்தில் 25-ஆம் ஆண்டு உலக தண்ணீர் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
    கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை பகிர்மான கமிட்டி, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, உழவர் விவாதக் குழு ஆகியன சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, பகிர்மான கமிட்டி தலைவர் கே.ஆர்.லோகநாதன் தலைமை வகித்தார். யு5 தலைவர் எம்.ஏ.பழனிசாமி முன்னிலை வகித்தார். பகிர்மான கமிட்டி செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி வரவேற்றார்.
    விழாவில், நீரை சேமிக்க எளிய வழிகள் எனும் தொகுப்பை பாரதிதாசன் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பொ.அ.வெங்கடாசலபதி வெளியிட யு5 பாசனசபை பொருளாளர் எம்.சதாசிவம் பெற்றுக் கொண்டார். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் நீர் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    நிகழ்ச்சியில், யு5 செயலாளர், கடுக்காம்பாளையம், சலங்கபாளையம் நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள், உழவர் விவாதக் குழு அமைப்பாளர்கள், பொதுப்பணித் துறை பணி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai