Enable Javscript for better performance
கற்கும் பாரதம் எழுத்தறிவுத் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    கற்கும் பாரதம் மையங்களில் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடைபெறவுள்ளது.
    கற்கும் பாரதம் செயல்படுத்தப்பட்டுள்ள ஒன்பது வட்டங்களில் மார்ச் 25-ஆ ம் தேதி ஊராட்சி வாரியாக கற்காதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடை பெற உள்ளது.
    எழுத்தறிவற்ற பெண்களின் அறிவை வளர்க்கும் வகையில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலமாக கற்கும் பாரதம் என்ற எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2009-ஆ ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மத்திய அரசு நிதி உதவியுடன் அமலான இத் திட்டம் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிப் பகுதிகளில் எழுத்தறிவற்ற 15 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அங்குள்ள பள்ளிகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. கணிதம், கையெழுத்து, எண் அறிவு உள்ளிட்ட பயிற்சி தரப்படுகிறது.
    இவர்களுக்கான அடிப்படைஎழுத்தறிவுத் தேர்வு ஆண்டுக்கு இரு முறையாக மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான தேர்வு மார்ச் 25-ஆ ம் தேதி 3602 மையங்களில் நடைபெற உள்ளது. 9 மாவட்டங்களில் அந்தந்த ஊராட்சி வாரியாக தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட கோபி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளில் 414 பேர் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai