Enable Javscript for better performance
காரில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    கொடுமுடி அருகேயுள்ள சிவகிரி பேருந்து நிலையத்தில் காரில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் பணம் வெள்ளிக்கிழமை மாயமானது.
    சிவகிரி, கொல்லங்கோயிலில் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வருபவர் ராஜ கணபதி பாலச்சந்திர சிவாச்சாரியார் (45). இவர், சிவகிரியில் உள்ள தனியார் வங்கியில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் பணம் வெள்ளிக்கிழமை எடுத்துள்ளார். பின்னர், பணம் இருந்த கைப்பையை தனது ஆம்னி வேனில் வைத்துள்ளார்.
    பிறகு சிவகிரி பேருந்து நிலைய வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு, பத்திர எழுத்தர் ஒருவரிடம் பேசிவிட்டு வந்தபோது, காரில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் பணம் , ஏடிஎம் கார்டு ஆகியவை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சிவகிரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai