Enable Javscript for better performance
குப்பை வரியை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குப்பை வரியை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகிரி பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் பொதுமக்களிடம் குப்பை வரி வசூலிப்பதை ரத்துசெய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    சிவகிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் நகரப் பொறுப்பாளர் சசி தலைமை வகித்தார். அண்ணாதுரை, காஜாமைதீன், மாதவன், கனகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    போராட்டம் குறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
    சிவகிரி பேருராட்சியில் தொழில் நிறுவனங்கள், கடைகள், வீடுகள் ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ. 300 , சிறிய தொழில் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.150 , வீடுகளுக்கு ரூ.10 என குப்பை வரி நிர்ணயம் செய்யப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை அச்சுறுத்தும் விதமாக விதிக்கப்பட்டுள்ள இந்தக் குப்பை வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai