Enable Javscript for better performance
கொங்கு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பணி ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு, கல்லூரி அறக்கட்டளைத் தலைவர் பரமேஸ்வரி லிங்கமூர்த்தி தலைமை வகித்தார். கொங்கு பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் ஆர்.எம்.தேவராஜா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் வி.வேதகிரி ஈஸ்வரன் வரவேற்றார்.
    விழாவில், சிறப்பு அழைப்பாளராக சென்னை, ராயல் என்பீல்டு, மனித வள மேம்பாட்டுத் துறை மேலாளர் எஸ்.ராஜரத்தினம் பங்கேற்று பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 440 மாணவ, மாணவிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி பேசினார்.
    இதில், அறக்கட்டளையின் பொருளாளர் ஈ.ஆர்.கே.கிருஷ்ணன், அறக்கட்டளை உறுப்பினர்கள் சி.குமாரசாமி, எம்.தங்கவேல், பார்வதி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.கோமதிசங்கர் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai