Enable Javscript for better performance
சின்னவீரசங்கிலியில் அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறை ஒன்றியம், சின்னவீரசங்கிலியில் அம்மாத் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பெருந்துறை ஒன்றியம், சின்னவீரசங்கிலி ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, பெருந்துறை வட்டாட்சியர் வீரலட்சுமி தலைமை வகித்தார். பெருந்துறை வட்ட வழங்கல் அலுவலர் முருகாயி முன்னிலை வகித்தார்.
    முகாமில், புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர், முகவரி மாற்றம், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, நலத்திட்ட உதவிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து 29 மனுக்கள் பெறப்பட்டன.
    முகாமில், அரசு அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை பெருந்துறை வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai