Enable Javscript for better performance
ஜாக்டோ- ஜியோ பேரணிக்கு தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஈரோட்டில் சனிக்கிழமை (மார்ச் 24) நடைபெறவுள்ள பேரணிக்கு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் ஆதரவு அளித்துள்ளனர்.
    இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கை:
    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்,
    ஊராட்சி செயலாளர், ஊர்ப்புற நூலகர், பகுதி நேர , தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலை
    பட்டதாரி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரிர்கள், அமைச்சுப் பணியாளர், கண்காணிப்பாளர்கள், பல்வேறு துறையில் உள்ள அரசு ஊழியர்களின் ஊதிய
    முரண்பாடுகளைக் களைந்து ஊதிய மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ (ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டமைப்பு) அமைப்பின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் சென்னை கோட்டை முற்றுகை ஆயத்தப் பேரணி மார்ச் 24-ஆம் தேதி நடத்துவதென தீர்மானித்துள்ளது.
    இதற்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் ஆதரவளிப்பதுடன் அனைவரும் ப்போராட்டத்தில் பங்கேற்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஒருங்கிணைப்பாளர்கள் யு.கே.சண்முகம், ஜெ.பாஸ்கர்பாபு ஆகியோர் தலைமையில் ஈரோட்டில் நடைபெறும் பேரணியில் திரளானோர் பங்கேற்று பேரணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai