Enable Javscript for better performance
பண்ணாரி அம்மன் சப்பரம் முன்பு படுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பண்ணாரி அம்மன் சப்பரம் முன்பு படுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

    By DIN  |   Published on : 24th March 2018 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்தியமங்கலத்தை அடுத்த தொட்டம்பாளையம் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்த பண்ணாரி அம்மன் சப்பரம் முன்பு படுத்து பொதுமக்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
    பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா கடந்த மார்ச் 19- ஆம் தேதி திருப்பூச்சாட்டுடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, தினசரி பல்வேறு கிராமங்களில் பண்ணாரி மாரியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    தொட்டம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதலே அங்குள்ள முக்கிய வீதிகளில் அம்மன் திருவீதி உலாவும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றன. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர். காலை 10.30 மணி அளவில் அம்மன் சப்பரம் வெள்ளியம்பாளையம் புறப்பட்டது. பவானி ஆற்றுப்பாலத்தின் மீது அம்மன் சப்பரம் வந்தபோது பக்தர்கள் சப்பரத்தின் முன்பு படுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
    இதையடுத்து வெள்ளியம்பாளையம் புதூர் அக்கரைத்தத்தப்பள்ளிஆகிய கிராமங்களில் அம்மன் திருவீதி உலா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இரவு அங்குள்ள பவானி ஆற்றை பரிசலில் கடந்த பண்ணாரி மாரியம்மன் சப்பரம் இக்கரைத்தத்தப்பள்ளி கிராமத்தை அடைந்தது. இரவு அங்குள்ள மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைக்குப் பின் அம்மன் சப்பரம் தங்க வைக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai