Enable Javscript for better performance
பெருந்துறையில் திமுக மாநாட்டு அரங்கை பார்வையிட்ட உதயநிதி, துர்கா ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறையில் திமுக மாநாட்டு அரங்கை பார்வையிட்ட உதயநிதி, துர்கா ஸ்டாலின்

    By DIN  |   Published on : 24th March 2018 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெருந்துறையில் சனிக்கிழமை துவங்கும் திமுக மண்டல மாநாட்டுக்கான அரங்கை உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.
    திமுக மண்டல மாநாடு பெருந்துறையில் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமான பந்தல், மேடை உள்ளிட்ட பணிகள் அமைக்கப்பட்டுள்ளன.
    இந்நிலையில், பெருந்துறைக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாநாட்டு அரங்கைப் பார்வையிட்டனர். அவர்களை மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் சு.முத்துசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
    மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த திமுக வரலாற்று புகைப்படக் கண்காட்சியை இருவரும் பார்வையிட்டனர். மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai