Enable Javscript for better performance
மகளிருக்கான நவீன கருத்தடை முறைகள்: விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மகளிருக்கான நவீன கருத்தடை முறைகள்: விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோட்டில் மகளிருக்கான குடும்ப நல நவீனக் கருத்தடை முறைகள் குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் பேசியதாவது:
    குடும்ப நலத் துறையின் கருத்தடை முறைகளில் நிரந்தர முறைகளாக பெண் கருத்தடை, ஆண் கருத்தடை முறைகள் உள்ளன. இதுதவிர, ஆண்களுக்கு ஆணுறையும், மகளிருக்கு மாலா என் உள்ளிட்ட பல முறைகள் உள்ளன. இதுதவிர புதுவரவாக வாய் வழி உட்கொள்ளும் சாயா சென்ட்குரோமைன் கருத்தடை மாத்திரைகளும் அந்தாரா என்ற ஊசி வழி கருத்தடை மருந்துகளும் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    சாயா சென்ட்குரோமைன் கருத்தடை மாத்திரையை முதல் மூன்று மாதங்களுக்கு வாரம் இரண்டு முறையும் பிறகு வாரம் ஒரு முறையும் உட்கொள்ள வேண்டும். இதனை பாலூட்டும் தாய்மார்களும் பயன்படுத்தலாம். எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது. இதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்ள வேண்டும்.
    அந்தாரா என்ற ஊசி வழி கருத்தடை மருந்தானது 3 மாதங்களுக்கு ஒரு முறை ஊசி மூலம் செலுத்தப்படும் நவீனக் கருத்தடை முறையாகும். குழந்தை பிறந்த பின் 6 வாரங்கள் கழித்து அல்லது மாதவிடாய் தொடங்கிய 5 நாள்களுக்குள் முதல் ஊசி போடப்படும். தொடர் ஊசிகள் 90 நாள்களுக்கு ஒரு முறை போடப்படும்.
    இம்மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இலவசமாகக் கிடைக்கும். இச்சிகிச்சை முறைகளை மகளிர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
    இக்கூட்டத்தில் ஊரக நலப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் ராஜசேகர், மருத்துவப் பணிகள் (காசநோய்) மருத்துவர் டி.ரமாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai