Enable Javscript for better performance
மொடக்குறிச்சி அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் பாலம் விரிவாக்கப் பணி துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மொடக்குறிச்சி அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் பாலம் விரிவாக்கப் பணி துவக்கம்

    By DIN  |   Published on : 24th March 2018 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், தொட்டிபாளையம் பகுதியில் ரூ. 32 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிக்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    மொடக்குறிச்சியிலிருந்து அவல்பூந்துறை வழியாக பெருந்துறை செல்லும் சாலையில் தொட்டிபாளையம் என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் சிறியதாக உள்ளது. தற்போது வாகனங்கள் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
    சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ள பாலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
    இந்நிலையில், ரூ. 32 லட்சம் மதிப்பில் பாலம் விரிவாக்கப் பணிக்கான பூமிபூஜை தொட்டிபாளையம் வாய்க்கால் கரையோரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி தலைமை தாங்கி பணியைத் துவக்கிவைத்தார். மொடக்குறிச்சி ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.பி.கதிர்வேல், ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் கணபதி, ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் குலவிளக்கு செல்வராஜ், சின்னியம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் நவீன் (எ) சி.நவநீதகிருஷ்ணன், குளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.மோகனசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, ஆவின் இயக்குநர் அசோக், குளுர் ஊராட்சி செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai