Enable Javscript for better performance
மொடக்குறிச்சி தொகுதியில் விரைவில் மஞ்சள் தரம்பிரிப்பு மையம் : எம்.எல்.ஏ வி.பி.சிவசுப்பிரமணி தகவல்- Dinamani

சுடச்சுட

    

    மொடக்குறிச்சி தொகுதியில் விரைவில் மஞ்சள் தரம்பிரிப்பு மையம் : எம்.எல்.ஏ வி.பி.சிவசுப்பிரமணி தகவல்

    By DIN  |   Published on : 24th March 2018 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மொடக்குறிச்சி தொகுதியில் மஞ்சள் தரம் பிரிக்கும் மையம் விரைவில் உருவாக்கப்படும் என்று அத்தொகுதி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி கூறியதாவது:
    மொடக்குறிச்சி தொகுதி மஞ்சளுக்கென்று தனிப்பெருமை கொண்டது. மஞ்சள் உற்பத்தியில் தமிழகத்திலேயே அதிக சிறப்பை பெற்றது. தற்போது மஞ்சள் வணிக வளாகம் பெருந்துறை, ஈரோட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதேபோல மொடக்குறிச்சி தொகுதியில் மஞ்சளுக்கென்று தரம் பிரிப்பு மையம் அமைய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசியுள்ளேன். இக்கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai