Enable Javscript for better performance
வழக்குரைஞர் வீட்டில் 35 பவுன் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு அருகே வழக்குரைஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    ஈரோடு அருகே உள்ள திண்டல் அரவிந்தர் நகரைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் பாக்கியராஜ் (34). இவர் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் அஷ்ரத் (8).
    அவல்பூந்துறையில் வசிக்கும் பாக்கியராஜின் தந்தை உடல் நிலை சரியில்லா காரணத்தால் சரண்யாவும், அஷ்ரத்தும் அங்கு சென்று அவரைக் கவனித்து வருகின்றனர். வாரத்துக்கு ஒருமுறை பாக்கியராஜ் அவல்பூந்துறைக்குச் சென்று தந்தை, மனைவி, மகன் ஆகியோரைப் பார்த்து வந்துள்ளார்.
    இந்நிலையில், இவரது வீட்டின் பூட்டு சனிக்கிழமை காலை உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் அவல்பூந்துறையில் இருந்த பாக்கியராஜுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அவர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் நகைகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
    இதுகுறித்த புகாரின்பேரில் ஈரோடு தாலுகா போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai