Enable Javscript for better performance
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

    By DIN  |   Published on : 24th March 2018 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெருந்துறையை அடுத்த, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளர்களுக்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    சரணலாயத்தை பார்வையிட முன்பு பெரியவர்களுக்கு ரூ. 5, அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு ரூ. 2, தனியார் பள்ளி மற்றும் பிற குழந்தைகளுக்கு ரூ. 4 என கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது பெரியவர்களுக்கு ரூ. 10-ம், அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு, ரூ. 2-ம், தனியார் பள்ளி மற்றும் பிற
    குழந்தைகளுக்கு ரூ. 5-ம் என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்டில் கேமராவுக்கு, ரூ. 50, ஹேண்டி கேமராவுக்கு, ரூ.300, டாக்குமெண்டரி படம் எடுக்க ரூ. 5,000, சினிமா, நாடக உள்ளிட்ட படப்பிடிப்புக்கு ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் என கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai