Enable Javscript for better performance
கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்- Dinamani

சுடச்சுட

    

    கேர்மாளம் வனத்தில் கரடி தாக்கியதில் தொழிலாளி காயமைடந்தார்.
     சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரை அடுத்த கேர்மாளம் வன கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது பக்கத்து வீட்டு நண்பர் சிவராஜ். இவர்கள் இருவரும் கேர்மாளம் வனத்துக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்றுள்ளனர். விறகு சேகரித்துக் கொண்டிருந்தபோது புதர் மறைவில் இருந்த கரடி திடீரென இருவரையும் தாக்கியது. அப்போது, இருவரும் கரடியைத் தாக்கி தப்பிக்க முயன்றுள்ளனர். கரடி தாக்கியதில் காயமடைந்த பெரியசாமியை அக்கிராம மக்கள் மீட்டு சத்தியமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
     இதுகுறித்து, வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai