Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

    By DIN  |   Published on : 31st March 2018 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தள்ளிப்போடும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வீடுகளில்  கருப்புக் கொடியேற்றும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, பாமக மாநில துணைச் செயலாளர் பொ.வெ.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருபாகரன், பெருமாள் உள்ளிட்டோர் சேர்ந்து  வில்லரசம்பட்டி, பெரியசேமூர் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றினர். 
     உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் வியாழக்கிழமை மாலைக்குள் அமைக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு வாரியத்தை அமைக்கவில்லை. இதற்குப் பதிலாக 9 பேர் கொண்ட குழுவை காவிரி மேலாண்மை ஆணைய வடிவிலான அமைப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அதன் செயல்பாடுகள் குறித்தும் கூட எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. எனவே, இவற்றைக் கண்டித்து பாமகவினர் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மொடக்குறிச்சியில்...: மத்திய அரசைக் கண்டித்து, மொடக்குறிச்சி அருகே சாவடிபாளையம் புதூர் பகுதியில் பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் நல்லசிவம் தலைமையில் வீடுகள், பா.ம.க. கொடிக் கம்பத்தில் கறுப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai