Enable Javscript for better performance
கூட்டுறவுப் பணியாளர்கள் குழு காப்பீட்டுத் திட்டத்தில் சேர ஏப்ரல் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவுப் பணியாளர்கள் குழு காப்பீட்டுத் திட்டத்தில் சேர ஏப்ரல் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 31st March 2018 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குழு காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற ஏப்ரல் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் சு.ராமதாஸ் வெளியிட்ட தகவல்:
     கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு காப்பீடு அளிக்க குழுக் காப்பீட்டுத் திட்டம், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பணியாளர் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. கூட்டுறவுச் சங்கத்தின் பங்காக ரூ. 725.50-ம், பணியாளர் பங்காக 725.50 உள்பட மொத்தம் ரூ. 1,451 தொகை பிரீமியமாக செலுத்த வேண்டும். அனைத்துப் பணியாளர்களும் ஏப்ரல் 26-ஆம் தேதிக்குள் ப்ரீமிய தொகையை சங்கம் சார்ந்துள்ள ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை தலைமை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
     குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால் பிரீமியத் தொகையின் மீது 9.50 சதவீத வட்டி சேர்த்து ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்குப் பின் இத்திட்டத்தில் சேர முடியாது. குறிப்பிட்ட தேதிக்குள் பிரீமிய தொகை செலுத்தாவிட்டால் அல்லது பணியாளர் இறந்த பின் பிரீமிய தொகை செலுத்தினால் ஏற்படும் இழப்புக்கு கூட்டுறவுச் சங்கங்கள் பொறுப்பேற்காது எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai