Enable Javscript for better performance
சாலை விபத்தில்இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோபி அருகே நேரிட்ட சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
     கோபி மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்குமார் (22). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், இவரது நண்பர் மதன்குமாரும் (18) இருசக்கர வாகனத்தில் பண்ணாரியில் இருந்து கோபி நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது, போடிசின்னாம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பால் டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
     இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai