Enable Javscript for better performance
சிலுவைப் பாதை பிரார்த்தனை- Dinamani

சுடச்சுட

    

    ஈரோட்டில் புனித வெள்ளியையொட்டி சிலுவைப் பாதை பிரார்த்தனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
     ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக கடைப்பிடித்து வருகின்றனர். இதையொட்டி, ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஏசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில் பெரிய சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. அப்போது, ஏசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சென்றபோது நடந்த பதினான்கு நிகழ்வுகளை தியானிக்கும் வகையில் 14 தலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 
     ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு நிகழ்வாக நினைவுகூர்ந்து கிறிஸ்தவர்கள் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். மாலையில் பங்குத் தந்தை அருண் தலைமையில் ஏசுவின் திருச்சடங்கு வழிபாடு, சிலுவை முத்தம், நற்கருணை ஆசீர் ஆகியன நடைபெற்றன. இதில், உதவி பங்குத் தந்தை சிஜு, அருட்தந்தை ஜான் கென்னடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     இதேபோல, ஈரோடு, பிரப் சாலையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு கூறிய ஏழு வார்த்தைகளைக் 
    கூறி சபை குருவானவர் பிரசங்கம் செய்தார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஈரோடு, ரயில்வே காலனி சி.எஸ்.ஐ. ஆலயத்திலும் சிறப்புப் பிரார்த்தனை
    நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai