Enable Javscript for better performance
சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்துபவர்கள் மீது  நடவடிக்கை கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்துபவர்கள் மீது  நடவடிக்கை கோரி மனு  

    By DIN  |   Published on : 31st March 2018 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெருந்துறை அருகே சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என டையிங் ஆலை உரிமையாளர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
     இதுகுறித்து, பெருந்துறை தாலுகா, முருங்கத்தொழுவு பகுதியைச் சேர்ந்த  டையிங் ஆலை உரிமையாளர் மனோகரன் அளித்த மனு:
     நான் முறைப்படி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று முருங்கத்தொழுவு பகுதியில் பிளீச்சிங், டையிங் ஆலை நடத்தி வருகிறேன். இந்நிலையில், தொழில் துறையிடம் அனுமதி பெறாமல் அதே பகுதியில் தனியாருக்குச் சொந்தமான அரிசி ஆலை இயங்கி வருகிறது.
     மேலும், உணவுப் பாதுகாப்புப் சட்டத்தின்கீழ் பதிவும் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த அரிசி ஆலையில்  நெல்லை மாசு படிந்த நீரில் ஊற வைப்பதும் அந்த நீரை அப்புறப்படுத்தாமல் தேக்கி வைப்பதால் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
     மேலும், அதிகமாக நெல்லை வேக வைக்கும்போது புகையுடன் சாம்பலும் வெளியேறுகிறது. இதுகுறித்து புகார் கூறினால் என் மீது பொய்ப் புகார் கொடுத்து அலைக்கழித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன். பொய் புகார் அளித்தவர்கள் மீதும், சுகாதார கேடு ஏற்படுத்துபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai