Enable Javscript for better performance
தலையநல்லூர் பொன்காளியம்மன் கோயில் பூச்சாட்டுதல் விழா- Dinamani

சுடச்சுட

    

    தலையநல்லூர் பொன்காளியம்மன் கோயில் பூச்சாட்டுதல் விழா

    By DIN  |   Published on : 31st March 2018 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடுமுடி அருகே சிவகிரி, தலையநல்லூரில் உள்ள பொன்காளியம்மன் கோயில் பூச்சாட்டுதல் விழா தொடங்கியது.        
     விழாவையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை  நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு சிவகிரி வேலாயுத சுவாமி கோயிலில் இருந்து மேளதாளத்துடன் அம்மன் அழைத்து வருதலும், ஏப்ரல் 2-ஆம் தேதி இரவு கிராம சாந்தி, காப்புக் கட்டுதல் ஆகிய  நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
     ஏப்ரல் 3-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு  ஊஞ்சலூர் காவிரி ஆற்றிலிருந்து அலகு குத்தியும், தீர்த்தக்காவடி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. காலை 7 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் 
    வழங்க உள்ளனர். மதியம் ஒரு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, இரவு 10 மணிக்கு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
     ஏப்ரல் 4-ஆம் தேதி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் காலை முதலே அம்மனுக்கு பொங்கலிட்டு மாவிளக்கு பூஜை செய்வார்கள். 5-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பந்தம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். ஆயிரக்கணக்கான தீப்பந்தங்களின் நடுவே அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு  திருநாகேஸ்வரர் கோயில் வளாகம் வழியாக பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
     தொடர்ந்து, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும். அன்று மாலை அம்மன் வசந்த மண்டபம் புறப்படுதல், வண்ணார கருப்பண சுவாமி பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெறும். ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 11 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai