Enable Javscript for better performance
தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரணம்- Dinamani

சுடச்சுட

    

    தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரணம்

    By DIN  |   Published on : 31st March 2018 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த பவானி வட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த நால்வரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
     தேனி மாவட்டம், குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேரில் 6 பேர் அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதில், உயிரிழந்த கவுந்தப்பாடியைச் சேர்ந்த விவேக், திவ்யா, கண்ணன், தமிழ்செல்வன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
     இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கினார்.
     மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணராஜ், கோபி கோட்டாட்சியர் கோவிந்தராஜ், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai