Enable Javscript for better performance
மண்ணெண்ணெய் குடித்த குழந்தை சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஈரோட்டில் பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயைக் குடித்த குழந்தை உயிரிழந்தது.
     கருங்கல்பாளையம், ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பிரகாஷ் (25). இவரது மனைவி மீனா. இவர்களது மகள் தர்ணிகா (ஒன்றரை வயது). மீனா வியாழக்கிழமை பிற்பகலில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தர்ணிகா அங்கு குடிநீர் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை குடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறிது நேரத்தில்  குழந்தை நினைவிழந்துள்ளது. இதைப்  பார்த்து அதிர்ச்சியடைந்த மீனா குழந்தையை சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், அங்கு தர்ணிகா உயிரிழந்தார்.
     இதுகுறித்து, கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai